மெல்போர்ன் நகரில் நடைபெற்று வரும் 2வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில், இந்திய அணி வெற்றி பெற 70 ரன்களை ஆஸ்திரேலியா இலக்காக நிர்ணயித்துள்ளது.
இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மெல்போர்னில் நடந்து வருகிறது. முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 195 ரன்னும் இந்தியா 326 ரன்னும் எடுத்தன.
இதனைத் தொடர்ந்து 2வது இன்னிங்சை ஆடத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 200 ரன்களை எடுத்துள்ளது. இதன்மூலம் இந்திய அணிக்கு வெற்றி இலக்காக 70 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
காமரூன் கிரீன் 45 ரன்கள், பாட் கம்மின்ஸ் 22 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். இந்திய தரப்பில் சிராஜ் 3 விக்கெட்டுகளும், பும்ரா, ஜடேஜா,அஷ்வின் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், யாதவ் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.