ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் 2ம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 277 ரன்களை எடுத்துள்ளது.
மெல்பேர்னில் நடைபெறும் போட்டியில் 1 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்ற நிலையில், ஆட்டத்தை இந்தியா இன்று தொடர்ந்தது. சுப்மான் கில் 45 ரன்னும், புஜாரா 17 ரன்னும், ஹனுமா விகாரி 21 ரன்னும், ரிசப் பந்த் 29 ரன்னும் சேர்த்து ஆட்டமிழந்தனர்.
ஒருமுனையில் விக்கெட் சரிந்த போதிலும் மறுமுனையில் தற்காலிக கேப்டன் ரஹானே, நிலையான ஆட்டத்தை வெளிபடுத்தி டெஸ்ட் அரங்கில் தனது 12ஆவது சதத்தை விளாசினார்.
ஆட்ட நேர முடிவில், முதல் இன்னிங்சில் 277 ரன்கள் எடுத்திருந்தது. இதன்மூலம் இந்திய அணி 82 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது. ரஹானே 104 ரன்னுடனும், ஜடேஜா 40 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்