கிரிக்கெட் உலகின் முதல் ஜாம்பவானாக போற்றப்படும் டான் பிராட்மேனின் பச்சை நிற டெஸ்ட் போட்டி தொப்பியை ஆஸ்திரேலிய வியாபாரி ஒருவர் இரண்டரை கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்து பிரமிப்பை ஏற்படுத்தி உள்ளார்.
இந்த தொப்பியை 1928 ல் தனது முதலாவது டெஸ்ட் போட்டியில் பிராட்மேன் பயன்படுத்தினார்.
1928 முதல் 1948 வரை ஆஸ்திரேலியவுக்காக 52 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய அவர் உலகின் சிறந்த கிரிக்கெட் வீரராக இன்றளவும் புகழப்படுகிறார். கிரிகெட் வரலாற்றில் இரண்டாவது அதிக தொகைக்கு ஏலம் போனது இந்த தொப்பியாகும். இந்த ஆண்டு துவக்கத்தில் ஆஸ்திரேலிய லெக் ஸ்பின்னர் ஷேன் வார்னின் டெஸ்ட் தொப்பி சுமார் ஐந்தரை கோடி ரூபாய்க்கு ஏலம் போனது.