2021ம் ஆண்டு ஐபிஎல் போட்டி, தற்போது இருப்பது போல 8 அணிகளை கொண்டு நடத்தப்படவே வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
2020ம் ஆண்டு போட்டி, 8 அணிகளை மட்டும் கொண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தி முடிக்கப்பட்டது. இந்நிலையில் 2021ம் ஆண்டு போட்டியில் மேலும் ஒன்று அல்லது 2 புதிய அணிகள் சேர்க்கப்பட வாய்ப்பிருப்பதாகவும், இதுகுறித்து பிசிசிஐ ஆலோசித்து வருவதாகவும் அண்மையில் தகவல் வெளியாகியிருந்தது.
ஆனால் 2021 போட்டியில் புதிய அணிகள் சேர்க்கபட வாய்ப்பில்லை எனவும், 2022 போட்டியிலேயே வாய்ப்புள்ளது என தற்போது தகவல் வெளியாகியுள்ளது.