அபுதாபியில் நடந்த ஃபார்முலா ஒன் கிராண்ட் ப்ரீ கார் பந்தயத்தில் பெல்ஜியம்வீரர் மேக்ஸ் வெர்ஸ்டாப்பன் சாம்பியன் பட்டம் வென்றார்.
உலக சாம்பியன் பட்டத்தை பிரிட்டன் வீரர் ஹாமில்டன் கைப்பற்றிய நிலையில், நடப்பு சீசனில் கடைசிப் போட்டி அபுதாபியில் நேற்று நடைபெற்றது.
விறுவிறுப்பான இந்த பந்தயத்தில் 305 கிலோ மீட்டர் இலக்கை ஒரு மணி 36 நிமிடம் 28 வினாடிகளில் கடந்து ரெட்புல் அணியின் வெர்ஸ்டாப்பன் முதலிடம் பிடித்தார்.
பின்லாந்தைச் சேர்ந்த வால்டேரி போட்டாஸ் 2ம் இடத்தையும், லீவிஸ் ஹாமில்டன் 3ம் இடத்தையும் பிடித்தனர்.