இந்தியா- ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே சிட்னியில் இன்று 3வது 20ஓவர் கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது.
நடந்து முடிந்த 2 இருபது ஓவர் போட்டியிலும் இந்திய அணி அபார வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி உள்ளது. 2 போட்டியிலும் தமிழக வீரர் நடராஜன் அபாரமாக பந்து வீசி விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.
இந்நிலையில், சிட்னியில் நடைபெறும் ஆட்டத்திலும் இந்திய அணி வென்று ஆஸ்திரேலியாவை ஒயிட்வாஷ் செய்யும் ஆர்வத்தில் உள்ளது.
இதற்கிடையில் 20 ஓவர் தொடரை சொந்த மண்ணில் இழந்த ஆஸ்திரேலியா இன்றைய போட்டியிலாவது வெற்றியை பெற அந்த அணி கடுமையாகப் போராடும் என எதிர்பார்க்கப்படுகிறது.