ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பந்து வீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதற்காக இந்திய அணி வீரர்களுக்கு ஐசிசி அபராதம் விதித்துள்ளது.
நேற்று சிட்னியில் நடைபெற்ற போட்டியில் முதலில் பந்து வீசிய இந்திய அணி 50 ஓவர்களை வீசி முடிக்க 4 மணி நேரம் 6 நிமிடங்கள் எடுத்துக்கொண்டது.
இது அனுமதிக்கப்பட்ட கால அளவை விட கூடுதல் நேரம் என்பதால், ஐசிசி நடத்தை விதிகளின்படி இந்திய அணி வீரர்களுக்கு ஆட்டத்திற்கான ஊதியத்தில் இருந்து 20 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.