2020ம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டியை நடத்தியதற்காக எமிரேட்ஸ் கிரிக்கெட் வாரியத்துக்கு (Emirates Cricket Board) இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் சுமார் 100 கோடி ரூபாய் கட்டணமாக வழங்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொரோனா பரவல் காரணமாக ஐபிஎல் போட்டி, இந்தியாவில் நடத்தப்படாமல் ஐக்கிய அரபு அமீரகம் நாட்டில் செப்டம்பர் 19ம் தேதி முதல் கடந்த 10ம் தேதி வரை நடத்தப்பட்டது.
இதற்கு கட்டணமாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் 100 கோடி ரூபாய் வழங்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதேபோல்ஐக்கிய அரபு அமீரகத்தில் வீரர்களுக்காக 14 ஐந்து நட்சத்திர ஓட்டல்கள் 3 மாதங்களுக்கு முன்பதிவு செய்யப்பட்டிருந்தது. இதன்மூலமும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு கணிசமான வருமானம் கிடைத்துள்ளதாக அந்தத் தகவல்கள் கூறுகின்றன.