பவுன்சர்களை எதிர்கொள்வதில் தனக்கு எந்த சவாலும் இருந்ததில்லை என ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.
நவம்பர் 27ம் தேதி ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் தொடங்க உள்ள நிலையில், அங்குள்ள ஆடுகளங்கள் வேகப்பந்து வீச்சுக்கு கைகொடுக்கும் என்பதால், இந்திய அணி அதற்கு தகுந்தவாறு வியூகங்களை வகுத்து வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இந்த தொடர் குறித்து பேசிய ஸ்மித், எதிரணியினர் பவுன்சர்களை வீசி தனது விக்கெட்டை வீழ்த்த நினைத்தால் அது தங்கள் அணிக்கே சாதகமாக முடியும் என்றும், பவுன்சர்களை எதிர்கொள்வதில் தனக்கு எந்த சிரமமும் இருந்ததில்லை எனவும் கூறியுள்ளார்.