மகளிர் டீ ட்வெண்டி சேலஞ்ச் தொடரில் ஸ்மிருதி மந்தனா தலைமயிலான ட்ரெய்ல் பிளாசர்ஸ் அணி, ஹர்மன்ப்ரீத் கவுரின் சூப்பர்நோவாஸ் அணியை 16 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது.
டாஸ் வென்ற சூப்பர் நோவாஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, களமிறங்கிய பிளாசர்ஸ் அணியில், அதிரடியாக ஆடிய கேப்டன் ஸ்மிரிதி மந்தனா 68 ரன்களை சேர்க்க, அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 118 ரன்களை சேர்த்தது.
இலக்கை நோக்கி களமிறங்கிய சூப்பர் நோவாஸ் அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழக்க, 20 ஓவர்கள் 102 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியுற்றது. இதன் மூலம், ட்ரெய்ல் பிளாசர்ஸ் அணி முதல் முறையாக மகளிர் டீ ட்வெண்டி சேலஞ்ச் கோப்பையை கைப்பற்றியது.