ஐபிஎல் தொடரின் எலிமினேட்டர் போட்டியில் பெங்களூர் அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி, ஐதராபாத் அணி இரண்டாவது தகுதிச்சுற்றுக்கு முன்னேறியது.
டாஸ் வென்ற ஐதராபாத் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய பெங்களூர் அணி வீரர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். அதிகபட்சமாக டெவிலியர்ஸ் 56 ரன்களை சேர்க்க, 20 ஓவர்கள் முடிவில் பெங்களூர் அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 131 ரன்களை மட்டுமே எடுத்தது.
இலக்கை நோக்கி களமிறங்கிய ஐதராபாத் அணி வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுக்களை இழக்க , 67 ரன்களை சேர்ப்பதற்குள் அந்த அணி 4 விக்கெட்டுகளை இழந்து திணறியது.
ஆனாலும், மறுபுறம் பொறுப்புடன் விளையாடி வில்லியம்சன் 50 ரன்களை சேர்க்க, 19.4 ஓவரில் ஐதராபாத் அணி இலக்கை எட்டியது.