ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் கடைசி லீக் போட்டியில் மும்பை, ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.
ஷார்ஜாவில் நடைபெறும் போட்டி, இந்திய நேரப்படி இரவு 7.30 மணிகு தொடங்குகிறது. ஏற்கனவே 9 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள மும்பை அணி, புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தை உறுதி செய்துள்ளது.
அதேசமயம் 6 போட்டிகளில் வென்று 5வது இடத்தில் உள்ள ஐதராபாத் அணி, பிளே ஆப் சுற்றுக்குள் நுழைய இன்றைய போட்டியில் வெல்வது கட்டாயமாக உள்ளது.
முன்னதாக இரு அணிகளும் மோதிய லீக் போட்டியில், மும்பை அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.