இத்தாலியில் நடந்த கிராண்ட்பிரி பந்தயத்தில் பிரிட்டன் வீரர் லீவிஸ் ஹாமில்டன் சாம்பியன் பட்டம் வென்றார்.
நடப்பு ஆண்டுக்கான பார்முலா1 கார் பந்தயம் 17 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இதன் 13-வது சுற்றான எமிலியா ரோமக்னா கிராண்ட்பிரி பந்தயம் இத்தாலியின் இமோலா நகரில் நேற்று நடைபெற்றது.
309 கிலோமீட்டர் பந்தய தூரத்தை ஒரு மணி 28 நிமிடம் 32 வினாடிகளில் கடந்து மெர்சிடஸ் அணியின் ஹாமில்டன் சாம்பியன் படம் வென்றார்.
நடப்பு சீசனில் அவருக்கு 9-வது வெற்றி இதுவாகும்.