வியன்னா ஓபன் டென்னிஸ் போட்டியில் ரஷ்யாவின் ஆன்ட்ரி ருப்லேவ் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.
ஆஸ்திரியத் தலைநகர் வியன்னாவில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் 23 வயதான ருப்லேவ் இத்தாலிய வீரர் லாரென்சோ சோனேகோவை எதிர்கொண்டார்.
80 நிமிடங்கள் விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியின் முடிவில், 6-4, 6-4 என்ற செட் கணக்கில் லாரென்சோவை வென்று ருப்லேவ் கோப்பையைக் கைப்பற்றினார்.