ஸ்பெயினில் நடைபெற்ற சைக்கிள் பந்தய போட்டியில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த டேவிட் கவுடு (David Gaudu) வெற்றி பெற்றார்.
லா வெல்டா (La Vuelta) சைக்கிள் பந்தய சாம்பியன்ஷிப் தொடரின் 11வது சுற்று போட்டிகள் வில்லாவிசியோஸா (Villaviciosa) நகரில் நடைபெற்றது.
170 கிலோ மீட்டர் பந்தய தூரம் கொண்ட இந்த போட்டியில், ஸ்பெயின் வீரர் மார்க் சோலரை பின்னுக்குத்தள்ளி டேவிட் கவுடு, நடப்பு தொடரில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தார்.
ஒட்டுமொத்த சாம்பியன் தரவரிசையில் ஸ்லோவேனியாவின் ரோக்லிச் (Roglic) தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார்.