ஐபிஎல் தொடரில் இன்று இரண்டு லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன.
அபுதாபியில் இந்திய நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கும் முதல் போட்டியில், தோனி தலைமையிலான சென்னை அணி, கே.எல்.ராகுல் தலைமையிலான பஞ்சாப் அணியுடன் மோதுகிறது.
சென்னை அணி ப்ளே ஆப் சுற்று வாய்ப்பை இழந்துவிட்ட நிலையில் ஆறுதல் வெற்றிக்காக போராடும். அதே நேரத்தில் பஞ்சாப் அணி இந்த போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பை தக்கவைக்க முடியும் என்ற கட்டாயத்தில் உள்ளது.
இரவு 7.30 மணிக்கு துபாயில் நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் இயான் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா அணியும், ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இரு அணிகளும் 12 புள்ளிகளை பெற்றுள்ள நிலையில், இதில் தோல்வியடையும் அணி அடுத்த சுற்று வாய்ப்பை இழக்கும் என்பதால் இந்த போட்டி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.