2021ம் ஆண்டு ஐபிஎல் போட்டிக்கும் தோனியே சென்னை சூப்பர்கிங்ஸ் அணிக்கு தலைமை தாங்குவார் என்று அந்த அணியின் தலைமை செயலதிகாரி காசி விசுவநாதன் தெரிவித்துள்ளார்.
ஆரம்பம் முதல் தோனி தலைமையில் செயல்படும் அந்த அணி, தற்போது நடைபெறும் போட்டியில் பிளே ஆப் சுற்றுக்கு கூட முன்னேற முடியாத நிலையில் உள்ளது.
இதனால் கேப்டன் தோனி மீது பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்படும் நிலையில், ஆங்கில செய்தித் தாளுக்கு காசி விசுவநாதன் அளித்துள்ள பேட்டியில், ஒரு ஆண்டு மட்டும் மோசமாக அமைந்ததை அடிப்படையாக கொண்டு, அணியில் அனைத்தையும் மாற்ற முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.