சென்னை அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் டுவைன் பிராவோ, காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து விலகினார்.
டெல்லி அணிக்கு எதிரான போட்டியின்போது இடுப்பில் ஏற்பட்ட காயம் காரணமாக அவதிப்பட்டு வந்த பிராவோ, ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடவில்லை. இந்நிலையில், தொடரில் எஞ்சியுள்ள போட்டிகளில் இருந்தும் பிராவோ விலகியுள்ளதாக சென்னை அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
நடப்பு ஐபிஎல் தொடரில் 10 போட்டிகளில் ஆடியுள்ள சென்னை அணி, 7ல் தோல்வி அடைந்து புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ள நிலையில், தொடரில் இருந்து பிராவோ விலகியிருப்பது அணிக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.