ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் போட்டியில் பெங்களூர் மற்றும் கொல்கத்தா அணிகள் மோதுகின்றன.
அபுதாபியில் நடைபெறும் போட்டி, இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. 6 வெற்றிகளுடன் பெங்களூர் அணி புள்ளிப்பட்டியலில் 3வது இடத்திலும், 5 வெற்றிகளுடன் கொல்கத்தா 4வது இடத்திலும் உள்ளது.
இரு அணிகளும் இன்றைய போட்டியில் வெற்றி பெற்று, பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பை உறுதி செய்யும் நோக்கில் களமிறங்க உள்ளன. முன்னதாக, இரு அணிகளும் மோதிய லீக் போட்டியில், பெங்களூர் அணி 82 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.