ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 200 போட்டிகளில் விளையாடிய முதல் வீரர் என்ற சாதனையை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் மகேந்திரசிங் தோனி படைத்துள்ளார்.
அபுதாபியில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்கியதன் மூலம் தோனிக்கு இந்த கவுரவம் கிடைத்துள்ளது. ஐபிஎல் தொடங்கிய 2008-ஆம் ஆண்டு முதல் விளையாடி வரும் தோனி, 2 ஆண்டுகள் புனே அணிக்காக விளையாடிய நிலையில், மற்ற ஆண்டுகளில் சென்னை அணிக்காகவே விளையாடி உள்ளார்.
ஐபிஎல் வரலாற்றில் வெற்றிகரமான கேப்டனாக கருதப்படும் தோனி தலைமையிலான சென்னை அணி, 3 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.