மும்பை அணிக்கு எதிரான ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில், இரண்டாவது சூப்பர் ஓவரில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது.
துபாயில் நடைபெற்ற ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 6 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக டிகாக் 53 ரன்களும், க்ருணால் பாண்டியா 34 ரன்களும் சேர்த்தனர்.
தொடர்ந்து ஆடிய பஞ்சாப் அணியில் ராகுல் அதிரடியாக விளையாடி 77 ரன்கள் குவித்தார். 20வது ஓவர் முடிவில் அந்த அணியும் 6 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் எடுத்தால் ஆட்டம் சமனில் முடிந்தது.
வெற்றி யாருக்கு என்பதைத் தீர்மானிக்க நடைபெற்ற சூப்பர் ஓவரில் இரு அணிகளும் சமநிலையில் இருந்ததால், இரண்டாவது சூப்பர் ஓவர் வீசப்பட்டது. இதில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.