ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில், 8 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வென்ற மும்பை அணி புள்ளிப் பட்டியலில் முதலிடம் பிடித்தது.
டாஸ் வென்ற கொல்கத்தா அணி பேட்டிங்கை தேர்வு செய்ய 61 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தது. இதையடுத்து வந்த கம்மின்ஸ் அதிரடியாக ஆடி 53 ரன்களை சேர்க்க, 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு கொல்கத்தா அணி 148 ரன்களை சேர்த்தது.
இலக்கை நோக்கி களமிறங்கிய மும்பை அணியில் தொடக்க வீரர்களான ரோகித் சர்மா - டீகாக் இருவரும் அதிரடியாக ஆடி ரன்குவித்தனர். ரோகித் சர்மா 35 ரன்களில் வெளியேற, இறுதிவரை ஆட்டமிழக்காமல் டீகாக் 78 ரன்களை குவித்தார். இதன் மூலம் அந்த அணி 16.5 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டியது.