ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில், 82 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூர் அணி அபார வெற்றி பெற்றது.
டாஸ் வென்ற களமிறங்கிய பெங்களூர் அணிக்கு , தொடக்க வீரர்கள் பின்ச் 47 ரன்களும், தேவ்தத் 32 ரன்களும் சேர்த்து நல்ல தொடக்கத்தை அளித்தனர்.
இறுதி ஓவர்களில் சிக்சர் மற்றும் பவுண்டரிகளை விளாசிய டிவிலியர்ஸ் 73 ரன்களை சேர்க்க, 20 ஓவர்கள் முடிவில் பெங்களூர் அணி, 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 194 ரன்களை குவித்தது.
தொடர்ந்து ஆடிய கொல்கத்தா அணியில் அதிகபட்சமாக, சுப்மன் கில் 34 ரன்களை சேர்த்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் பெவிலியன் திரும்ப, கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 112 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வியுற்றது.