ஐஃபெல் கிராண்ட் பிரி கார் பந்தயத்தில் பிரிட்டன் வீரர் லீவிஸ் ஹாமில்டன் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார்.
ஜெர்மனியின் நியுர்பர்கில் நடைபெற்ற போட்டியில் முன்னணி வீரர்களான ரெய்க்கோனன், வெட்டல், போட்டஸ் ஆகியோரின் கார்கள்மீது மற்ற கார்கள் மோதியதால் பின்தங்கினர்.
308 கிலோ மீட்டர் இலக்கை ஒரு மணி 35 நிமிடம் 49 நிமிடங்களில் கடந்து மெர்சிடஸ் அணியின் ஹாமில்டன் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார்.
பெல்ஜியம் வீரர் வெர்ஸ்டாப்பன் இரண்டாம் இடத்தையும், ஆஸ்திரேலிய வீரர் ரிக்கியார்டோ மூன்றாம் இடத்தையும் பிடித்தனர்.
91வது முறையாக பார்முலா ஒன் வெற்றியைப் பெற்றுள்ள ஹாமில்டன், அதிக கிராண்ட்பிரி கார்பந்தயங்களை வென்றவர் என்ற மைக்கேல் சுமாக்கரின் சாதனையை சமன் செய்துள்ளார்.