ஐபிஎல் தொடரில் ஐம்பது முறை 50 ரன்களுக்கு அதிகமாக சேர்த்த முதல் வீரர் என்ற சாதனையை, ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் படைத்துள்ளார்.
பஞ்சாப் அணிக்கு எதிரான நேற்றைய லீக் ஆட்டத்தில் 40 பந்துகளில் 52 ரன்களை எடுத்தன் மூலம், வார்னர் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
இதுவரை 132 போட்டிகளில் களம் கண்ட வார்னர், 4 சதங்கள் மற்றும் 46 அரைசதங்களுடன் 4,933 ரன்களை குவித்துள்ளார். இந்த பட்டியலில் கோலி இரண்டாவது இடத்திலும், ரெய்னா மற்றும் ரோகித் சர்மா 3வது இடத்திலும் உள்ளனர்.