ஐபிஎல் கிரிக்கெட்டில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் ராஜஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்டதை விட பந்துவீச அதிக நேரம் எடுத்து கொண்டதற்காக அந்த அணி கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்துக்கு 12 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
நேற்று நடைபெற்ற போட்டியில் மும்பை அணி 57 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அப்போட்டியில் 20 ஓவர்களை வீசி முடிக்க நிர்ணயிக்கப்பட்டதை விட ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அதிக நேரம் எடுத்துக் கொண்டது.
இதற்காக ஸ்டீவ் ஸ்மித்துக்கு ஐபிஎல் நிர்வாகம் அபராதம் விதித்துள்ளது.