ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ,மும்பை அணி 57 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
டாஸ் வென்று களமிறங்கிய மும்பை அணி வீரர்கள், தொடக்கம் முதலே அதிரடியாக ஆடி ரன்குவிப்பில் ஈடுபட்டனர். அதிகபட்சமாக சூர்யாகுமார் யாதவ் ஆட்டமிழக்காமல் 79 ரன்களை குவிக்க, மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 193 ரன்களை குவித்தது.
இலக்கை நோக்கி களமிறங்கிய ராஜஸ்தான் அணியில் அதிகபட்சமாக, ஜோஸ் பட்லர் 70 ரன்களை குவிக்க மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் விக்கெட்டுக்களை பறிகொடுத்தனர்.18.1 ஓவரில் அந்த அணி 136 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியுற்றது.
இந்த வெற்றியின் மூலம் மும்பை அணி புள்ளிப்பட்டியலில் மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளது.