பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் உலகின் நம்பர் ஒன் வீரரான நோவக் ஜோகோவிச் 3வது சுற்றுக்கு முன்னேறினார்.
பாரிசில் நடைபெற்று வரும் தொடரில், லிதுவேனியா வீரர் ரிகார்டஸ் பெரான்கிசை எதிர்கொண்ட ஜோகோவிச், 6-1, 6-2, 6-2 என்ற நேர்செட்டில் மிக எளிதாக வெற்றி பெற்றார். இதன் மூலம் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் 70 வெற்றிகளை பெற்ற ரோஜர் பெடரரின் சாதனையை அவர் சமன் செய்துள்ளார்.
மற்றொரு ஆட்டத்தில் பல்கேரியா வீரர் டிமிட்ரோவ் 6-4, 7-6, 6-1 என்ற நேர்செட்டில், சுலோவக்கியாவின் ஆந்த்ரே மார்டினை வீழ்த்தி 3வது சுற்றுக்கு முன்னேறினார்.
மகளிர் பிரிவில் 2017-ம் ஆண்டு சாம்பியனான ஜெலினா ஆஸ்டாபென்கோ, தரவரிசையில் 4-வது இடத்தில் உள்ள கரோலினா பிளிஸ்கோவாவை 6-4, 6-2 என்ற நேர்செட்டில் வீழ்த்தி அதிர்ச்சி அளித்தார்.