ஐபிஎல் தொடரின் லீக் ஆட்டத்தில் பஞ்சாப் அணியை 48 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை அணி வெற்றி பெற்றது.
டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. தொடர்ந்து களமிறங்கிய மும்பை அணியில் அதிரடியாக ஆடிய ரோகித் சர்மா 70 ரன்களை சேர்த்து, ஐபிஎல் தொடரில் ஐயாயிரம் ரன்களை குவித்த 3வது வீரர் என்ற சாதனையைப் படைத்தார். இறுதியில் பொல்லார்ட் மற்றும் ஹர்திக் பாண்டியாவின் அதிரடி ஆட்டத்தால், மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் சேர்த்தது.
இலக்கை நோக்கி களமிறங்கிய பஞ்சாப் அணியில் அதிகபட்சமாக நிகோலஸ் பூரான் 44 ரன்களை சேர்க்க மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர். 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 143 ரன்களை மட்டும் எடுத்து தோல்வியுற்றது. இந்த வெற்றியின் மூலம் மும்பை அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பிடித்தது.