ஐபிஎல் தொடரில் பரபரப்பான ஆட்டத்தில் மும்பை அணியை சூப்பர் ஓவரில் வீழ்த்தி,பெங்களூரு அணி வெற்றி பெற்றது.
டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.இதையடுத்து களமிறங்கிய பெங்களூரு அணியில், தொடக்க வீரர்கள் பின்ச் 52 ரன்களும், படிக்கல் 54 ரன்களையும் சேர்த்தனர்.
அதிரடியாக ஆடிய டிவிலியர்ஸ் 24 பந்துகளில் 55 ரன்களை சேர்க்க, பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில், 3 விக்கெட் இழப்பிற்கு 201 ரன்களை சேர்த்தது.
தொடர்ந்து களமிறங்கிய மும்பை அணியில் அபாரமாக ஆடிய இஷான் கிஷன் 99 ரன்களை குவித்தார். இறுதிகட்டத்தில், சிக்சர், பவுண்டரிகளை பறக்கவிட்ட பொல்லார்ட் 60 ரன்களை சேர்க்க, 20 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 201 ரன்களை எடுத்ததால் ஆட்டம் சமனில் முடிந்தது.
சூப்பர் ஓவரில் மும்பை 7 ரன்களை மட்டுமே எடுக்க, பெங்களூரு அணி எளிதாக வெற்றி பெற்றது.