ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி எதிர்கொள்கிறது.
சார்ஜாவில் நடைபெறும் இந்த போட்டி மாலை 7.30 மணிக்கு தொடங்க உள்ளது. தரவரிசைப் பட்டியலில் தலா 2 புள்ளிகளுடன் பஞ்சாப் அணி 2வது இடத்திலும், ராஜஸ்தான் அணி 4வது இடத்திலும் உள்ளது.
பஞ்சாப் அணி இறுதியாக விளையாடிய போட்டியில், 97 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணியை வீழ்த்தியது. ராஜஸ்தான் ராயல் அணியும், முந்தைய ஆட்டத்தில் வலுவான சென்னை அணியை 16 ரன்கள் வீழ்த்தி உள்ளதால், வெற்றியை தொடர தீவிரம் காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இரு அணிகளும் இதுவரை 19 முறை நேருக்கு நேர் மோதியதில், ராஜஸ்தான் அணி 10 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தகக்து.