கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்ட ஒலிம்பிக் போட்டிகள் 2021ஆம் ஆண்டு ஜப்பானில் நடைபெறுவது உறுதி என அந்நாட்டின் பிரதமர் யோஷிஹைட் சுகா அறிவித்துள்ளார்.
நடப்பாண்டு கோடையில் டோக்கியோவில் நடைபெறுவதாக இருந்த ஒலிம்பிக் போட்டிகள் கொரோனா பரவலால் ஒரு வருடம் ஒத்திவைக்கப்படுவதாக சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி மற்றும் ஜப்பானிய அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் ஐநா பொதுச்சபை கூட்டத்தில் காணொலி காட்சி மூலம் பேசிய பிரதமர் யோஷிஹைட் சுகா, 2021இல் ஒலிம்பிக் போட்டியை நடத்துவதில் ஜப்பான் உறுதியாக உள்ளது என்றார். மனிதகுலம் தொற்றுநோயை தோற்கடித்தது என்பதற்கான சான்றாக அது அமையும்." என்றும் அவர் தெரிவித்தார்.