விராட் கோலியின் மோசமான ஆட்டத்திறனுக்கு அனுஷ்கா சர்மாதான் காரணம் என்று கூறவில்லை என கவாஸ்கர் விளக்கமளித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கோலி தலைமையிலான பெங்களூரு அணி தோல்வி அடைந்தது. இந்த போட்டியின்போது வர்ணனையாளராக இருந்த கவாஸ்கர், கோலி லாக் டவுனின் போது அனுஷ்காவுன் பந்து வீச்சை மட்டுமே எதிர்கொண்டதால் மோசமாக ஆடுவதாக தெரிவித்த கருத்து விமர்சனத்திற்குள்ளானது.
இதற்கு கோலியின் மனைவி அனுஷ்கா கண்டனம் தெரிவித்த நிலையில், இது குறித்து விளக்கமளித்த கவாஸ்கர் தன்னுடைய கருத்து தவறாக புரிந்துகொள்ளப்பட்டதாக கூறியுள்ளார்.