ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில், பஞ்சாப் அணி 97 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணியில், கேப்டன் கே.எல் ராகுல் பெங்களூரு அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தார்.
69 பந்துகளில் கே.எல்.ராகுல் 132 ரன்களை குவிக்க, பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 206 ரன்களை குவித்தது.
தொடர்ந்து, களமிறங்கிய பெங்களூரு அணி வீரர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளைப் பறிகொடுத்தனர்.
அதிகபட்சமாக, வாஷிங்டன் சுந்தர் 30 ரன்களும், டீவிலியர்ஸ் 28 ரன்களும் எடுக்க, 17வது ஓவரின் முடிவிலேயே அந்த அணி 109 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து தோல்வியுற்றது.