ஐபிஎல் டி20 தொடரின் இன்றைய ஆட்டத்தில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன.
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் கொல்கத்தா அணியை 49 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை அணி வெற்றி பெற்றது.
இதனையடுத்து துபாயில் இன்று நடைபெறும் 6வது லீக் ஆட்டத்தில் விராட் கோலி தலைமையிலான பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி, கே.எல்.ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை எதிர்கொள்கிறது.
தனது முதல் போட்டியில் தோல்வியை சந்தித்த பஞ்சாப் அணி, பெங்களூரு அணியை வீழ்த்தி வெற்றிக்கணக்கை தொடங்கும் முனைப்பில் உள்ளது.