இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச்சும், மகளிர் ஒற்றையர் பிரிவில் ருமேனியாவின் சிமோனா ஹாலெப்பும் சாம்பியன் பட்டம் வென்றனர்.
ரோமில் நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதி போட்டியில் உலகின் முதல்நிலை வீரரான ஜோகோவிச், அர்ஜெண்டீனாவின் டியேகோ ஷ்வார்ட்ஸ்மேனை எதிர்கொண்டார்.
விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்டத்தின் இறுதியில் ஜோகோவிச் 7-5, 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று, இத்தாலி ஓபனில் 5வது முறையாக பட்டம் வென்றார்.
மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் சைமோனா ஹேலப்பும், செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவாவும் பலப்பரீட்சை நடத்தினர்.
முதல் செட்டை சைமோனா 6-0 என கைப்பற்றிய நிலையில், 2வது செட்டின் போது முதுகுவலி காரணமாக பிளிஸ்கோவா போட்டியில் இருந்து விலகுவதாக தெரிவித்ததால் சிமோனா ஹாலெப் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.