தொடையில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டிகளில் இருந்து விலகுவதாக, அமெரிக்க ஓபன் சாம்பியன் நவோமி ஒசாகா அறிவித்துள்ளார்.
கடந்த வாரம் நடந்த அமெரிக்க ஓபன் இறுதிப் போட்டியில் பெலாரஸ் வீராங்கனை விக்டோரிய அஸ்ரெங்காவை தோற்கடித்து 22 வயதான ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா தனது மூன்றாவது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றார்.
அந்த போட்டியின் போது இடது தொடை எலும்பில் ஏற்பட்ட காயம் காரணமாக தன்னால் இந்த ஆண்டு பிரெஞ்சு ஓபனில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் ஒசாகா அறிவித்துள்ளார்.
மேலும் போட்டியில் பங்கேற்க உள்ள வீரர்களுக்கும் ஏற்பாட்டாளர்களுக்கும் தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.