அமெரிக்க ஓபன் டென்னிஸ் அரையிறுதி போட்டியில் அந்நாட்டு நட்சத்திர வீராங்கனை செரினா வில்லியம்ஸ் தோல்வியடைந்து வெளியேறினார்.
நியூயார்க்கில் நடைபெற்ற மகளிர் ஒற்றையர் அரையிறுதிப் போட்டியில், பெலாரஸ் வீராங்கனை விக்டோரியா அசரெங்காவுடன் அவர் பலப்பரிட்சையில் ஈடுபட்டார்.
முதல் செட்டை 1-6 என்ற கணக்கில் செரினா கைப்பற்றியபோதிலும், அடுத்த 2 சுற்றுகளையும் 6-3, 6-3 என்ற கணக்குகளில் அசரெங்கா தனதாக்கினார்.
இதையடுத்து போட்டியில் வெற்றி பெற்ற அசரெங்கா, இறுதி போட்டியில் நாளை ஜப்பானின் நவோமி ஓசாகாவை எதிர்கொள்கிறார்.