ஜப்பான் தலைநகர் டோக்கியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அடுத்தாண்டுக்கு ஒத்திவைக்கப்பட்ட ஒலிம்பிக் போட்டிகள், கோடை வெப்பத்தால் பாதிக்கப்படும் சூழல் உருவாகி உள்ளதாக வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக டோக்கியோ பல்கலைக்கழகத்தின் சுற்றுச்சூழல் மற்றும் நகர்ப்புற திட்டமிடல் பேராசிரியர் யோகோகாரி மேற்கொண்ட பகுப்பாய்வின் அடிப்படையில், அதிகப்பட்ச வெப்பம் மற்றும் ஈரப்பதத்தால் ஒலிம்பிக் போட்டிகள் பாதிக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதனால் போட்டி ஏற்பாட்டாளர்கள் மோசமான தட்ப வெப்பநிலைக்கு தயாராக இருக்க வேண்டும் என்றும் யோகோகாரி தெரிவித்துள்ளார்.