உலகின் நம்பர் ஒன் டென்னிஸ் வீராங்கனையும் நடப்பு சாம்பியனுமான ஆஷ்லி பார்ட்டி, பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டிகளில் பங்கேற்க போவதில்லை என்று அறிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆஷ்லி, கடந்த ஆண்டு ரோலண்ட் கரோஸில் நடந்த போட்டியில் மார்க்கெட்டா வொண்ட்ரூசோவாவை தோற்கடித்து கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றார்.
இந்த நிலையில், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அமெரிக்கா ஓபன் டென்னிஸில் பங்கேற்காத ஆஷ்லி, வரும் 27 ஆம் தேதி தொடங்க உள்ள பிரெஞ்சு ஓபனில் இருந்தும் விலகுவதாகவும் அறிவித்துள்ளார்.