அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் ஒற்றையர் பிரிவில் 7 ஆண்டுகளுக்கு பிறகு, இந்திய வீரர் ஒருவர் வெற்றி பெற்றுள்ளார்.
டெல்லியை சேர்ந்த 23 வயதான சுமித் நாகல் அமெரிக்காவின் பிராட்லி கிலானை தனது முதல்சுற்றில் எதிர்கொண்டார்.
விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் 6-1, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வென்று சுமித் அசத்தினார். இதன் மூலம் 2013ல் வெற்றி பெற்ற சோம்தேவ் வர்மனுக்குப் பிறகு, அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் ஒற்றையர் பிரிவில் 2வது சுற்றுக்கு முன்னேறிய முதல் இந்திய வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
இதைதொடர்ந்து, நாளை நடைபெற உள்ள 2வது சுற்றில் ஆஸ்திரிய வீரர் டொமினிக் திய்மை, சுமித் நாகல் எதிர்கொள்கிறார்.