ஐபிஎல் போட்டியில் பங்கேற்க ஐக்கிய அரபு அமீரகம் சென்றுள்ள 2 வீரர்கள் உள்ளிட்ட 13 பேருக்கு கொரோனா உறுதியாகியிருப்பதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் பந்துவீச்சாளர் தீபக் சாகருக்கு (Deepak Chahar) கொரோனா உறுதியானதாக முதலில் செய்திகள் வெளியாகின.
இந்நிலையில் பிசிசிஐ இன்று வெளியிட்ட அறிவிப்பில் 13 பேருக்கு அறிகுறி இல்லாமல் கொரோனா உறுதியாகியிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கொரோனா உறுதியான 13 பேரும் அணியினரிடம் இருந்து தனிமைபடுத்தப்பட்டு ஐபிஎல் மருத்துவ குழுவால் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அந்த அறிவிப்பில் பிசிசிஐ கூறியுள்ளது.