சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சேர்ந்த சிலருக்கு கொரோனா உறுதியானதால், ஐபிஎல் போட்டி அட்டவணை வெளியிடுவதை பிசிசிஐ நிறுத்தி வைத்துள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் அடுத்த மாதம் நடத்தப்படும் போட்டிக்காக துபாய்க்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர் சென்ற நிலையில், தீபக் சாகர் உள்ளிட்ட சிலருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.
இதையடுத்து துபாய் செல்லும் முன்பு இந்தியாவில் பிசிசிஐ அறிவுரையை மீறி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர் பயிற்சி முகாம் நடத்தியதாகவும், இதுகுறித்து விசாரிக்கபடுவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
போட்டி அட்டவணை வெளியிடுவதை நிறுத்தி வைத்தாலும், ஐபிஎல் போட்டி நடைபெறுவதற்க்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என பிசிசிஐ தெரிவித்திருப்பதாக அந்த செய்திகள் கூறுகின்றன.