அர்ஜூனா விருது, கேல்ரத்னா விருதுக்கான பரிசுத் தொகையை அதிகரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
சிறந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு அர்ஜூனா விருதும், கேல்ரத்னா விருதும் மத்திய அரசால் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. அதனுடன் முறையே 5 லட்சம் ரூபாயும், ஏழரை லட்சம் ரூபாயும் பரிசுத் தொகையாக அளிக்கப்படுகிறது.
இந்நிலையில் டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, அர்ஜூனா விருதுக்கான பரிசுத் தொகையை 15 லட்சம் ரூபாயாகவும், கேல் ரத்னா விருதுக்கான பரிசுத் தொகையை 25 லட்சம் ரூபாயாகவும் உயர்த்த மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக குறிப்பிட்டார்.