சாம்பியன்ஸ் லீக் கால் பந்து இறுதிப் போட்டியில் பிஎஸ்ஜி அணி தோல்வியடைந்ததையடுத்து பாரிஸில் ரசிகர்கள் கலவரத்தில் ஈடுபட்டது தொடர்பாக 80க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
போர்ச்சுக்கல் தலைநகர் லிஸ்பனில் நடந்த சாம்பியன்ஸ் லீக் இறுதிப்போட்டியில் பேயர்ன் முனிச்சி அணியிடம் பிஎஸ்ஜி அணி 1-0 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது.
இதையடுத்து பாரிஸின் பார்க் டெஸ் பிரின்சஸ் மைதானத்தில் பெரிய திரையில் போட்டியை காண திரண்ட நூற்றுக்கணக்கான ரசிகர்கள், ஆத்திரத்தில் கலவரத்தில் ஈடுபட்டனர்.
இதில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த ஏராளமான கார்களுக்கு தீவைக்கப்பட்டது. கட்டிடங்கள் ஜன்னல் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. கடைகள் சூறையாடப்பட்டன.