ஸ்பானிஷ் கிராண்ட் பிரிக்ஸ் கார் பந்தயத்தில் லீவிஸ் ஹேமில்டன் முதலிடம் பெற்றார்.
ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனாவில் நேற்று நடைபெற்ற பந்தயத்தில் மெர்சிடிஸ் பென்ஸ் கார் ஓட்டிய லீவிஸ் ஹேமில்டன் ஒரு நிமிடம் 15 நொடிகள் 5 மைக்ரோ நொடிகளில் பந்தயத் தொலைவைக் கடந்து முதலிடம் பிடித்தார்.
வால்ட்டேரி போட்டாஸ் ஒரு நிமிடம் 15 நொடிகள் 6 மைக்ரோ நொடிகளில் கடந்து இரண்டாமிடம் பெற்றார். மேக்ஸ் வெர்ஸ்டப்பன் மூன்றாமிடத்தையும் செர்ஜியோ பெரீஸ் நான்காமிடத்தையும் பிடித்தனர். ஆறுமுறை உலகச் சாம்பியனான ஹேமில்டன் கடந்த 3 ஆண்டுகளாக ஸ்பானிஸ் கிராண்ட் பிரிக்ஸ் பந்தயத்தில் வெற்றிபெற்றுள்ளதும் குறிப்பிடத் தக்கது.