பிரபல ஜமைக்கா தடகள வீரர் உசேன் போல்ட் ஓய்வு பெற்று விட்டார். உசேன் போல்ட் தன் பார்ட்னர் கசி பென்னட்டுடன் சேர்ந்து வாழ்ந்து வருகிறார். நேற்று கசி பென்னட்டின் பிறந்தநாள் . இதையொட்டி , தன் மகளின் புகைப்படத்தை முதன்முறையாக சமூக வலைத்தளத்தில் உசேன் போல்ட் பகிர்ந்து மகிழ்ந்துள்ளார். கடந்த ஜூன் 14- ந் தேதி உசேன் போல்ட் , கசி பென்னட்டுக்கு பெண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு ஒலிம்பியா லைட்னிங் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
காதலியின் பிறந்த நாளை முன்னிட்டு, சமூகவலைத்தளத்தில் கசி பென்னட்டுடன் மகள் இருப்பது போன்ற புகைப்படங்களை பகிர்ந்த உசேன் போல்ட் , '' என் காதலிக்கு பிறந்த நாள் வாழ்த்துகள். இந்த சிறந்த நாளை உன்னுடன் நான் கழித்தேன். உன்னை சந்தோஷமாக வைத்துக் கொள்வதும் உன் முகத்தில் சிரிப்பை பார்ப்பது மட்டும் எனக்கு முக்கியமானது. வேறு எதுவும் எனக்கு தேவையில்லை. நம் மகள் ஒலிம்பியா லைட்னிங் போல்ட்டுடன் இணைந்து புதிய வாழ்க்கையை தொடங்குவோம்'' என்று குறிப்பிட்டுள்ளார்
உசேன் போல்ட் ஒலிம்பிக்கில் 8 தங்க பதங்களையும் உலக தடகளத்தில் 11 தங்கப் பதக்கங்களையும் வென்றவர். 100 மீட்டர் ஓட்டத்தில் உலக சாதனை உசேன் போல்ட் வசம்தான் உள்ளது. உலகத் தடகள போட்டியில் 2009- ம் ஆண்டு 100 மீட்டர் ஓட்டத்தை 9.53 விநாடிகளில் கடந்து உசேன் போல்ட் சாதனை படைத்தார். 2012 - ம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக்கில் 100 மீட்டர் ஓட்டத்தை 9. 63 விநாடிகளில் கடந்து தங்கம் வென்றார்.
உசேன் போல்ட்டின் இந்த சாதனைகள்மற்றோரு வீரர் முறியடிப்பது கடினமே. ஜமைக்காவிலுள்ள கிங்ஸ்டனில் பிறந்த உசேன் போல்ட்டுக்கு தற்போது 33 வயதாகிறது. 2017- ம் ஆண்டு தடகளத்தில் இருந்து அவர் ஓய்வு பெற்றார்.