ஊரடங்கிற்குப் பிறகு வலைபயிற்சிக்கு திரும்பியது உற்சாகம் அளிப்பதாக, இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் ஒருநாள் போட்டிகளுக்கான கேப்டன் மிதாலிராஜ் தெரிவித்துள்ளர்.
ஹைதராபாத்தில் உள்ள செயின்ட் ஜான்ஸ் மைதானத்தில் பயிற்சியை தொடங்கியுள்ள அவர், ஊரடங்கு சமயத்தில் தனது உடல்தகுதியை மேம்படுத்த முடிந்தாலும் தான் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டதாக தெரிவித்தார்.
தொடர்ந்து, வாரத்திற்கு இருமுறை மட்டுமே பயிற்சியில் ஈடுபட்டாலும், தனது திறமையை மேம்படுத்துவதை உறுதி செய்வதாகவும் குறிப்பட்டார். நியூசிலாந்தில் நடைபெற உள்ள உலகக்கோப்பை தொடரை பெரிதும் எதிர்பார்ப்பதாகவும் கூறியுள்ளார்.