ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங், தனது கிரிக்கெட் வாழ்க்கையில் தான் சந்தித்த அதிவேகமான பந்துவீச்சு குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ட்விட்டரில், இது தொடர்பாக பதிவிட்டுள்ள ரிக்கி பாண்டிங், பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் வீசிய பந்தே தான் சந்தித்த அதிவேக பந்து என குறிப்பிட்டுள்ளார்.
ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ் என அழைக்கப்படும் அக்தர், 1999ஆம் ஆண்டு பெர்த்தில் நடந்த போட்டியில், அதிவேகத்துடன் வீசிய இந்த பந்து சுமார் 150 கிலோ மீட்டர் வேகத்தில் வீசப்பட்டதாக கூறப்படுகிறது.