நடப்பாண்டு ஐபிஎல் தொடர் ரத்து செய்யப்பட்டால், பிசிசிஐக்கு சுமார் இரண்டாயிரம் கோடி ரூபாய் வரை வருமான இழப்பு ஏற்படும் என கணிக்கப்பட்டுள்ளது.
கோடிக்கணக்கான ரூபாய் செலவழித்து நடத்தப்படும் பிரமாண்ட கிரிக்கெட் தொடரான, ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகள், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.
144 தடை உத்தரவு காலம் மேலும் நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுவதால் நடப்பாண்டு ஐபிஎல் தொடர் ரத்து செய்யப்பட வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. தொடர் ரத்தாகும் பட்சத்தில், இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐக்கு சுமார் 2 ஆயிரம் கோடி ரூபாய் வரை வருமான இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.